Breaking News

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய "தேச ஒற்றுமை" மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0
2023 ஜனவரி, 15.16 ஆகிய இரு தினங்கள் ஈரோட்டில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய "தேச ஒற்றுமை" மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்1. மனிதகுலத்துக்கு நேர்வழி காட்டுவதற்காக ஏக இறைவனாம் அல்லாஹ் உவந்தளித்த உன்னத மார்க்கமாம் தூய இஸ்லாத்தின் வழிமுறைகளையும் ஒழுக்க மாண்புகளையும் முழுமையாக பின்பற்றி மனித சமுதாயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக முன்மாதிரியாக முஸ்லிம்கள் குறிப்பாக இளைஞர்கள் திகழ வேண்டும். சோதனையான காலகட்டங்களில் இஸ்லாமிய நெறிகளை இறுகப் பற்றிக் கொள்வதே ஈடேற்றம் பெறும் ஒரே வழி என்பதை இம்மாநாடு நினைவூட்டுகிறது.

2. நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு விளைவிக்கும் இளைஞர்களின் குடும்ப வாழ்வையும் சமூக வாழ்வையும் பறித்துக்கொண்டிருக்கும் மது முதலிய போதைப்பொருள்கள் அனைத்தையும் முற்றிலும் தடை செய்து போதையற்ற தமிழகம் என்ற உன்னத இலக்கை அடையும் நோக்கிவ பூரண மது விலக்கை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

3. நம் இந்திய நாட்டின் உன்னத அடையாளமான வேற்றுமையில் ஒற்றுமை பன்முகத்தன்மை ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலையும் அதன் விளைவாக சர்வதேச அரங்கில நம் தேசத்துக்கு ஏற்பட்டுள்ள தலைக்குனிவையும் இம்மாநாடு கவலையோடு நினைவு கூர்ந்து ஜனநாயக சக்திகள் மனத்துணிவுடனும் நம்பிக்கையுடனும் தெளிவான செயல் திட்டத்துடனும் இதை எதிர்கொண்டு நம் நாட்டின் பாரம்பரிய பெருமையை மீட்க ஓரணியில் திரள வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

4. ஆயுள் தண்டனை காலத்தை விடவும் கூடுதலாக கால் நூற்றாண்டை
கடந்து தமிழகத்தின் சிறைகளில் வாடும் சிறைவாசிகள் பலர் பல்வேறுஉடல் உபாதைகளால் உயிர் கொல்லி வியாதிகளால் பாதிப்புக்கு ஆளாகி
மரணத்தை எதிரநோக்கியுள்ளனர்.இவர்களில் சிலர் இறுதி நாட்களிலாவது தன் குடும்பத்தினருடன் இறுதி நாட்களில் குடும்பத்தோடு இருக்கமுடியுமா என ஏக்கத்திலும் பரிதவிப்பிலும்  உள்ளனர் இவர்களின் ஏக்கத்தை  கனிவுள்ளத்தோடு பரிசீலித்து அவர்களை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

5. ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தேசிய கல்விக்கொள்கை (NEP- 2820) தன் அறிவுத்திறனால் ஏற்கனவே முன்னேறியுள்ள சமூகத்தை கற்காலத்துக்கு கூட்டி செல்கிறது சமூக நீதிக்கு எதிரானது, நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இம்மாநாடு திட்டவட்டமாக கருதுகிறது எனவே ஒன்றிய அரசு இதை கவுரவம் பார்க்காமல் உடனே கைவிடவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

6. மனிதர்களுக்கு இடையே நிலவி வரும் எல்லா பாகுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் இஸ்லாம் எதிர்க்கிறது எனவே தான் இன இழிவு நீங்க இஸ்லாம் ஒன்றே நன் மருந்து என்றார் தந்தை பெரியார் 

இஸ்லாத்தின் ஏகத்துவம் சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளால் கவரப்பட்டு இஸ்லாத்தை விரும்பித் தழுவும் சகோதரர்கள் BCM (BACK WARD CLASS) என்ற சான்றிதழ் பெறுவதற்கு ஏதுவான தெளிவான அரசாணை இல்லாததாலும் அண்மையில் வெளியான உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு அவர்களை BCM ஆக அங்கீகரிப்பதற்கு எதிராக வந்துள்ளதாலும் இந்த சகோதரர்கள் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளை பெறுவதில் புதிய சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இது சமூக நீதிக்கு எதிரானது என்பதை கருத்தில் கொண்டு புதிதாக இஸ்லாத்தை தழுவும் சகோதர சகோதரிகளை அங்கீகரிக்கும் வகையில் தெளிவான BCM ஆக அரசாணை வெளியிட வேண்டுமென தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

ஆகிய 6 தீர்மானங்களை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிறைவேற்றியுள்ளது

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback