Breaking News

நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானம்..! விபத்தின் போது எடுக்கப்பட்ட லைவ் வீடியோ…!

அட்மின் மீடியா
0

நேபாள தலைநகர் காத்மாண்டில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு ஏ டி ஆர் 72 விமானம் பொக்காரா நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் 68 பயணிகளும், நான்கு விமான பணியாளர்களுடன் சேர்த்து 72 பேர் பயணித்தார்கள் விமானம் தரையிறங்க சில நிமிடங்களில் இருந்த நிலையில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. 




இந்த நிலையில், விமானத்தின் உள்ளே இருந்த இந்திய பயணி ஒருவர் விபத்துக்கு சில நிமிடங்கள் முன் பேஸ்புக் நேரலையில் வீடியோ பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிழம்புகள் எழுவது தெரிகிறது.


வீடியோ பார்க்க:-

https://twitter.com/NewsJunkieBreak/status/1614671994921836544

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback