Breaking News

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

 வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால், இன்று(ஜன.,27) 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை குறையும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.மிதமான மழை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:-

பூமத்திய ரேகையை ஒட்டிய, இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதி மற்றும் அதையொட்டிய தென் கிழக்கில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது

மேலும் அடுத்த இரண்டு தினங்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும். அதன் பிறகு தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து 31.01.2023 அன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து 01.02.2023 இலங்கை கடற்பகுதிகளை சென்று அடையக்கூடும்.

இதன் காரணமாக,29ம் தேதி வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். 30, 31 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்றும்; தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில், வரும் 29, 30ம் தேதியிலும் மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback