Breaking News

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு பூமிக்கு மிக அருகில் வரும் வால் நட்சத்திரம் - வெறும் கண்ணால் பார்க்கலாம் வீடியோ vaal natchathiathiram

அட்மின் மீடியா
0

50000 ஆண்டுகளில் நிகழாத அதிசயம் முதன் முறையாக நிகழ உள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.

சூரிய குடும்பத்தில் வியாழனின் சுற்றுப்பாதையில் சூரியனை சுற்றி வரும் வால் நட்சத்திரம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.சூரிய குடும்பத்தின் உள் வழியாக பயணித்து வரும் இந்த வால்நட்சத்திரம் வரும் வாரங்களில் பூமியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வால் நட்சத்திரம் என்றால் என்ன?

வால்நட்சத்திரம் என்பது பனிக்கட்டியாலான சிறிய சூரியக் குடும்பப் பொருளாகும். இந்த பனிப் பந்து போன்ற வால் நட்சத்திரம் தனக்கென ஒரு சுற்றுபாதையை அமைத்துக் கொண்டு சூரிய மண்டலத்தை சுற்றி வரும்

இது சூரியனுக்கு நெருக்கமாக கடக்கும்போது சூடாகி வளிமங்களை வெளியிடும். இந்த நிலைக்கு coma என்று பெயர்.  இப்படி வால் நட்சத்திரம் சூரியனைச் சுற்றிவரும் போது பனிப் பந்தில் உள்ள வாயுக்கள் மற்றும் தூசித் துகள்கள் சூரியன் வீசும் அனற் காற்று மற்றும் வெப்பத்தினால் coma வில் இருந்து வெளியேறி சூரியனுக்கு எதிர் புறம் வால் போல் நீள்கிறது.இதனால் வால் நட்சத்திரம் என அழைக்கப்படுகின்றது

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு:-

மேலும் இந்த பச்சை நிற வால் நட்சத்திரத்திற்கு சி/2022 ஈ3 என்று நாசா பெயர் வைத்துள்ளது. இந்த அரிய வகையான பச்சை நிற வால் நட்சத்திரமானது இந்த மாத கடைசியிலோ அல்லது பிப்ரவரி 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் பூமிக்கு மிக அருகிலேயே தென்படும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த பச்சை வால் நட்சத்திரத்தை நாம் இரவில் வெறும் கண்ணால் பார்க்கலாம் என தெரிவித்துள்ளனர்.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/nbcwashington/status/1612754392909758466

 

vaal natchathiathiram

வால் நட்சத்திரம் என்றால் என்ன 

Comet

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback