Breaking News

இனி வாட்ஸப்பில் மெசஜை ஒருமுறை மட்டுமே பார்க்கமுடியும் புதிய அப்டேட் முழு விவரம் whatsapp view once feature

அட்மின் மீடியா
0

 வாட்ஸ் அப்பில் புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உள்ள தனக்குத்தானே செய்தி அனுப்பிக்கொள்ளும் வசதியை தற்போது கணினி பயன்பாட்டிற்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

அதேபோல ஒரு செய்தியை ஒரு முறை மட்டுமே வாசிக்கும் வகையிலும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

அதாவது வாட்ஸ்-அப்ப்பில் ஏற்கனவே நாம் அனுப்பும் புகைப்படம் மற்றும் வீடியோவை எதிர்தரப்பில் இருப்பவர், ஒருமுறை பார்த்ததும் தானாகவே அழிந்து விடும் வகையிலான வசதி பயன்பாட்டில் உள்ளது. 

அதைதொடர்ந்து தற்போது, நாம் அனுப்பும் செய்தியை, எதிர்தரப்பில் இருப்பவர் ஒருமுறை பார்த்ததும் தாமாகாவே அழிந்து போகும் வகையிலான, view-once text messages எனும் புதிய வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது பீட்டா வெர்ஷனில், புதிய வசதி சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது. send பட்டனின் பக்கவாட்டில் ஒரு சிறிய பூட்டு போன்ற அம்சம் இருக்கும். குறிப்பிட்ட குறுஞ்செய்தியை அனுப்பும்போது அந்த பூட்டை அழுத்தினால், எதிர்தரப்பில் இருப்பவர் அந்த குறுஞ்செய்தியை ஒருமுறை பார்த்ததுமே தாமாக அழிந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

whatsapp view once text messages

how to send view once on whatsapp

view once feature in whatsapp

whatsapp new feature view once

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback