தமிழக இளைஞர்களிடம் ரயில்வேயில் வேலை! பயிற்ச்சி என ரயில்களை எண்ணி கொண்டிருந்த இளைஞர்கள்| கோடிக்கணக்கில் பணம் மோசடி! முழு விவரம் Railway Job Fraud
தமிழகத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் ரயிலில் டிக்கெட் பரிசோதகர்கள் வேலை வாங்கித் தருவதாகவும், கிளார்க் பணி வாங்கித் தருவதாகவும் கூறி லட்சக்கணக்கில் ஒரு கும்பல் பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளது. இளைஞர்களை ரயில்வேயில் வேலை எனக் கூறி, ஒரு மாதமாக டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்களை எண்ண விட்டு ஏமாற்றிய சம்பவம் நடந்திருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சுப்புசாமி (78), டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில் டெல்லி ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு பரிசோதகர்கள், ரயில் போக்குவரத்து உதவியாளர்கள், எழுத்தர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 பேரிடம் இருந்து சுமார் ரூ.2.67 கோடி வரை பண மோசடி செய்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து ரயில்வே போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, இதை பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றினர்.
அந்தப் புகாரில் இவர் தனது பகுதியில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைக்க பல்வேறு உதவிகளை செய்து வந்தேன் அப்போது கோவையை சேர்ந்த சிவராமன் என்பவர் டெல்லியில் தனக்கு செல்வாக்கு இருப்பதாகவும் ரயில்வேயில் உயரதிகாரியாக பணியாற்றும் அதிகாரியுடன் தனக்கு பழக்கம் இருப்பதாகவும் இதனால், ரயில்வேயில் வேலை வாங்கி கொடுத்து விடலாம் என்று சிவராமன் சொல்லியிருக்கிறார். இதை நம்பிய சுப்புசாமியும் தனக்கு தெரிந்த இளைஞர்களிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
அதன்பின்பு முதற்கட்டமாக 3 பேரை அழைத்து கொண்டு சிவராமனை சந்தித்துள்ளார் அவர் வடக்கு ரயில்வேயின் உதவி இயக்குநர் என்று விகாஸ் ராணைவை அறிமுகபடுத்தினார், அவர் முதல் கட்டமாக தான் அழைத்து வந்த 3 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் அதற்க்காக ஒவ்வொரு இளைஞரிடமும் ரூ.33 லட்சம் பெற்றுள்ளார்கள்
பணத்தை வாங்கிய ராணா அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கொடுப்பதற்கு முன்பாக உங்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டி இருக்கிறது என்று கூறி ஒரு இடத்தில் தங்க வைத்து புத்தகங்களை கொடுத்து படிக்க வைத்துள்ளார்.
பின்னர் டெல்லி சங்கர் மார்க்கெட்டில் வடக்கு ரயில்வேயின் இளநிலை இன்ஜினியர் அலுவலகத்தில் ஆவணங்கள் சரிபார்ப்பு நடந்துள்ளது. தொடர்ந்து டெல்லி ரயில்வே மருத்துவமனைக்கு மருத்துவ சான்றிதழுக்காக பல்வேறு தேதிகளில் இளைஞர்களை அழைத்து சென்றுள்ளார். இளைஞர்கள் அனைவருக்கும் ஒருமாதம் பயிற்சி என்று அடையாள அட்டை, பணி நியமண ஆணை, உள்ளிட்டவைகளை போலியாக வழங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பயிற்சி என்ற பெயரில் டெல்லி ரயில் நிலையத்தில் வந்து செல்லும் ரயில்களையும் ரயில் பெட்டிகளையும் என்ன சொல்லி ஏமாற்றி உள்ளனர். இவை அனைத்தும் முறைப்படி நடந்துள்ளது என்பதும் இதற்கு விகாஸ் ரானாவின் நண்பர் துபே உதவியதும் விசாரணையில் தெரியவந்தது.
அதன்பின்பு இளைஞர்களிடம் டெல்லி ரெயில் நிலையத்தில் கையில் ஒரு நோட்டுகளை வைத்துக்கொண்டு போகும் வரும் ரெயில்களை கணக்கெடுத்துக் கொண்டும், எத்தனை பெட்டிகள் உள்ளன என்று இளைஞர்கள் சிலர் குறிப்பெடுத்துக்கொண்டு இருந்தனர்.
இதைக் கவனித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். அப்போது தங்களுக்கு ரயில்வே துறையில் டிடிஆர், கிளார்க் வேலை உள்ளிட்ட பணிகள் கிடைத்து இருப்பதாகவும் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர், இதைக் கேட்ட போலீசார் இதுபோல எந்த தகவலும் எங்களுக்கு இல்லையே மோசடி நடந்துள்ளது என கூறியதை கேட்ட இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்து சுப்புசாமிக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள் இதை கேட்டு பதறிப்போன சுப்புசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, மோசடி மற்றும் ஏமாற்றுதல் பிரிவில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் இதுபோன்ற போலி வேலைவய்ப்பு ஏமாற்றுக்காரர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று அடிக்கடி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது ஆனால் அதையும் மீறி இது போல் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது
Tags: இந்திய செய்திகள்