Breaking News

மனித மூளையில் சிப் - எலான் மஸ்க் அறிவிப்பு human brain chip Elon Musk

அட்மின் மீடியா
0

எலான் மஸ்க் துணை நிறுவனராக உள்ள நியுராலிங்க் நிறுவனம், மனித மூளையில் மிகச் சிறிய கம்ப்யூட்டர் சிப் பதிக்கும் முயற்சியில் இறங்க உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்

 

மனித மூளையில் இந்த சிப்பை வைப்பதன் மூலம் மூளையின் செயல்பாட்டை இந்த சிப் புரிந்துகொண்டு, அதை திரையில் எழுத்துக்களாக வெளிப்படுத்தும்  பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் பலனளிக்கும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த சோதனை தற்போது குரங்குகளிடம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளாதால் விரைவில் மனிதர்கள் மத்தியில் சோதனை செய்யப்பட உள்ளது. இந்த பரிசோதனை முயற்சிக்கு தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது இதற்க்கான அனுமதி கேட்கும் பணியில் தங்கள் நிறுவனம் இறங்கியுள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.

இன்னும் 6 மாதங்களில் மனிதர்களிடம் நியூரோலிங்க் சோதனை தொடங்கும். நாங்கள் மனிதர்கள் மத்தியில் இந்த சோதனையை மேற்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம் என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.

Tags: தமிழக செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback