புயல் நேரத்தில் முன்னெச்ரிக்கை நடவடிக்கைகள் என்ன | பாதுகாப்பாக இருப்பது எப்படி முழு விவரம் How To Stay Safe During A Cyclone?
தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள 'மாண்டஸ்' புயல், தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலானது, இன்று நள்ளிரவு புதுவை - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையே கடக்க வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
மேலும் மாண்டஸ் புயலின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கான அரசு பேருந்து சேவை இரவு நேரத்தில் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலின் போது பாதுகாப்பாக இருக்கவேண்டிய வழிமுறை
காற்று அதிகம் வீசும் ஆகையால் ஜன்னல்கள், கதவுகளை மூடி வைக்க வேண்டும்.
தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் விலை உயர்ந்த பொருட்கள், மற்றும் ஆவணங்கள், கல்வி சான்றிதழ்கள் ஆகியவைகளை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
கயிறு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட், கத்தி, குளுகோஸ் அடங்கிய அவசர உதவி பெட்டகம் தயாராக இருக்க வேண்டும்.
மரத்தடியில் வாகனங்களை நிறுத்தவோ, புயல் வீசும் போது வாகனத்தில் பயணிக்கவோ வேண்டாம்.
திறந்தவெளியில் உள்ள கூர்மையான, எளிதில் விழுந்து/பறந்து விடக்கூடிய பொருட்கள் உயிருக்கு அச்சுறுத்தலானவை என்பதால், மூடிய அறைகளில் பாதுகாப்பாக இருக்கவும்.
மழையின் காரணமாக மின்சாரம் தடைப்படக்கூடும். அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரத்தை நிறுத்திவிடும். அதனால் விளக்கு, பேட்டரி உள்ள டார்ச் விளக்கு மொபைல் போன்களை சார்ஜ் செய்து வைத்திருங்கள்.
இன்வர்ட்டர் உள்ளவர்கள் அவசர தேவைக்கு மட்டும் இன்வர்ட்டர் உபயோகித்து கொள்ளுங்கள்
மின்சாரம் இருக்கும் போதே மேல்நிலைத் தொட்டிகளில் நீரை நிரப்பி வைத்துக்கொள்வது நல்லது, குடிநீரை காய்ச்சிப் பருகவும்.
புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் திடீரென குறையும். அதனால் புயல் கடந்துவிட்டதாக எண்ண வேண்டாம். மந்தநிலைக்கு பின் மீண்டும் குறைக்காற்று பலமாக வீசும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையத்திலிருந்து புயல் கடந்துவிட்டது எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை வெளியில் செல்ல வேண்டாம்.
ஈரமான கையோடு மின் சாதனங்களை உபயோகிக்க கூடாது.
அறுந்து விழுந்த மின்கம்பிகளின் அருகில் செல்ல கூடாது. மரங்கள், மின்கம்பங்களுக்கு அருகில் நிற்க வேண்டாம்,
Tags: முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி