Breaking News

தமிழகத்தில் சென்னையில் முதல்முறையாக கண்ணாடி பாலம் எங்கு தெரியுமா!!! முழு விவரம் chennai glass bridge

அட்மின் மீடியா
0

 வில்லிவாக்கம் ஏரியில் ரூ.8 கோடி செலவில் கண்ணாடி தொங்கு பாலம்: அடுத்த ஆண்டு மே மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது



சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஏரி 39 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி சென்னை குடிநீர் வாரியம் வசம் இருந்தது. சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இங்கு நடைபாதை, சுற்றுச்சுவர், படகு சவாரி, வாகன நிறுத்தம், உணவகம், ஆவின் பாலகம், இசை நீரூற்று, 12டி திரை யரங்கம், மோனோ ரெயில் சேவை, நீர்விளையாட்டு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையிலேயே முதல்முறையாக வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களை அதிகம் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏரி மட்டத்தில் இருந்து 4 மீட்டர் உயரம் கொண்ட இந்த கண்ணாடி தொங்கு பாலம் ரூ.8 கோடி செலவில் 350 மீட்டர் நீளகொண்டது ஆகும் . இந்த  கண்ணாடி தொங்கு பாலத்தில் ஒரே நேரத்தில் 100 பேர் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி தொங்கு பாலம் வருகிற மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வீடியோ பார்க்க:-

https://twitter.com/praveenkchitti/status/1599638252189020160

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback