Breaking News

மாண்டஸ் புயல் காரணமாக 6 மாவட்டங்களில் இரவு பேருந்துகள் இயக்கப்படாது தமிழக அரசு அறிவிப்பு mandous cyclone news

அட்மின் மீடியா
0

 மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம்ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மாண்டஸ்புயல் சின்னம் உருவாகி இருக்கிறது. இதனால் கனமழையும் அதி கனமழையும் பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் எச்சரிக்கையை அடுத்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில்  சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் புயல் வீசும் என்பதால் இன்று இரவு பேருந்து சேவை அளிக்கக்கூடாது என்றும் பேருந்து நிலையங்களில் கூட்டமாக மக்கள் யாரும் நிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback