இன்று முதல் டிஜிட்டல் ரூபாய் தொடக்கம்! முதற்கட்டமாக 4 வங்கியில் அறிமுகம்
இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டத்தை ரிசர்வ் வங்கி மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய 4 பெரு நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் துவங்கியுள்ளதுமொபைல் செயலி மூலம் இ-வாலட் உருவாக்கி டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்தலாம்; டிஜிட்டல் ரூபாயை டோக்கன் வடிவில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2022 மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்த நிலையில், சில்லறை பணப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை இன்று இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.மேலும் இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டத்தை ரிசர்வ் வங்கி மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய 4 பெரு நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் துவங்கியுள்ளது.மொபைல் செயலி மூலம் இ-வாலட் உருவாக்கி டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்தலாம்; டிஜிட்டல் ரூபாயை டோக்கன் வடிவில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் முதற்கட்டமாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி ஆகிய நான்கு வாங்கி வாடிக்கையாளர்கள் மின்னணு வடிவில் ரூபாயை பயன்படுத்தி கொள்ளும் நடைமுறை தொடங்கியுள்ளது
Tags: இந்திய செய்திகள்