Breaking News

சேலம் அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்-வளர்க்க முடியாது என மருத்துவமனையிலேயே குழந்தைகளை விட்டுச் சென்ற பெற்றோர்

அட்மின் மீடியா
0
சேலம் அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்-வளர்க்க முடியாது என மருத்துவமனையிலேயே குழந்தைகளை விட்டுச் சென்ற பெற்றோர்


சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த அக்டோபர் மாதம்  20 ஆம் தேதி பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளது

எடை குறைவாக பிறந்த இந்த மூன்று பெண் குழந்தைகளையும் வறுமையின் காரணமாக 3 குழந்தைகளையும் தங்களால் பராமரித்து வளர்க்க முடியாத நிலையில் தங்களின் நிலை இருப்பதாக குழந்தைகளின் பெற்றோர் மருத்துவமனை முதல்வர் வள்ளியிடம் தெரிவித்து அந்த 3 குழந்தைகளையும்  மருத்துவமனையிலேயே வைத்துக்கொள்ளுமாறு கூறி அங்கேயே விட்டுச் சென்றனர். 

இதனால் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக எடை குறைந்து பிறந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்தன அதனை தொடர்ந்து  தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் சென்று குழந்தைகளை பார்வையிட்டு குழந்தைகளை மாவட்ட குழந்தைகள்  பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரியிடம் 3 குழந்தைகளும் வழங்கப்பட்டன.மேலும் சிறந்த முறையில் குழந்தைகளை பராமரிக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback