புர்ஜ் கலிஃபா அருகே 35 மாடி கட்டடத்தில் திடீர் தீ விபத்து! வீடியோ Fire near world's tallest building Burj Khalifa in Dubai
துபாயில் Boulevard Walk பவுல்வார்டு வாக் 35 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த 35 மாடி கட்டிடம் உலகின் உயரமான புர்ஜ் கலிபா கட்டடத்தின் அருகே உள்ளது ஆகும்
நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அந்த தீயானது வேகமாக கட்டிடத்தின் மேல்நோக்கி பரவத்தொடங்கியது இதனால் கட்டடம் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.அதிகாலை 4.00 மணியளவில் தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கட்டடம் கடுமையாக சேதமடைந்துள்ளது.தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
வீடியோ பார்க்க:-
Tags: வெளிநாட்டு செய்திகள்