Breaking News

இளம் விஞ்ஞானி:கண் பார்வையற்றவர்களுக்கு பிரத்யேக கண்ணாடி கண்டுபிடித்த அரசு பள்ளி 10 ம் வகுப்பு மாணவர்கள் அப்சல்முகமது, சபரிவாசன் முமு விவரம் young scientist

அட்மின் மீடியா
0

 கண் பார்வையற்றவர்கள் தடையின்றி நடக்க, சென்சார் மற்றும் ஸ்பீக்கர் பொருத்தப்பட்ட பிரத்யேக கண்ணாடியை 10-ம் வகுப்பு மாணவர்கள் அப்சல்முகமது, சபரிவாசன் தயாரித்துள்ளனர். இதனை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் மாணவர்கள் விளக்கியுள்ளனர்.


நாகப்பட்டினம் நாலுகால் மண்டபத்தில் உள்ள அரசு தேசிய மேல்நிலைபள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அப்சல்முகமது, சபரிவாசன் ஆகியோர் கண் பார்வையற்றவர்கள் பாதிப்பு இல்லாமல் நடந்து செல்லும் வகையில் அவர்களுக்கான பிரத்யேகமாக  சென்சார் மற்றும் ஸ்பீக்கர் பொருத்தப்பட்ட கண்ணாடி ஒன்றை தயார் செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர் இந்த இளம் விஞ்ஞானிகள்



மேலும் நேற்று நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் மாணவர்கள் ம் இந்தக் கண்ணாடி தொடர்பான செயல்முறை விளக்கத்தை செய்து காட்டினர்.  அதன்பின்பு மாணவர்களை வாழ்த்தி மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார்


மாணவர்கள் கண்டுபிடித்த கண்ணாடியின் சிறப்பம்சங்கள்:-

கண்ணாடியில் சென்சார் மற்றும் ஸ்பீக்கர் பொருத்தியுள்ளார்கள் இதன்மூலம் குறிப்பிட்ட இடைவெளியில் ஏதேனும் தடை வந்தால் ஸ்பீக்கரில் ஒலியை எழுப்பும்.இதைக் கொண்டு கண் பார்வையற்றவர்கள் விலகி செல்ல முடியும்.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback