Breaking News

புதிய போக்குவரத்து விதிகள் இன்றுமுதல் அமல் போக்குவரத்து போலிசார் அறிவிப்பு tamil nadu traffic rules and fines in tamil language

அட்மின் மீடியா
0

புதிய போக்குவரத்து விதிகள் சென்னையில் இன்று முதல் அமலுக்கு வருகின்றன . மோட்டார் வாகன விதிகளின்படி சாலைகளில் வாகனத்தில் செல்லும் போது ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிட மறுத்தால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட இருக்கிறது.



கடந்த 2019 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளை தடுக்கின்ற வகையில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை கொண்டு வந்தது. இது தமிழ்நாட்டில் தற்போது அமல்படுத்தப்படுகிறது. 

அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடன் பயணிக்கும் பயணிப்போர் மீத்ம் பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது . இது வாடகை கார் ஆட்டோக்களில் பயணிப்பவர்களுக்கு பொருந்தாதும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் , அரசின் அவசரப் போக்குவரத்திற்கு வழி விடாத நபர்களிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்றால் அபராத தொகை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதே தவறை மீண்டும் செய்தால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

 வாகன பந்தயத்தில் ஈடுபட்டால் 1500 ரூபாய் முதல் வசூலிக்கப்பட்ட அபராத தொகை இனிமேல் 15 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

சிக்னல் விதிகளை மீறுபவர்களுக்கு இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த 100 ரூபாய் இனிமேல் ஆயிரம் ரூபாயாக வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

பதிவு செய்யப்படாத வாகனங்களை இயக்கினால் 2500 ரூபாய் முதல் 5000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு 2500 ரூபாய் அபராதம் என்றும் விதிக்கப்பட்டது. இனிமேல் 5000 ரூபாயாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் முதல் முறை 2000ரூபாயும்  இரண்டாம் முறை பத்தாயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் 500 ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. 

இதுதொடர்பாக விடுத்துள்ள அறிவிப்பில்,

கடந்த 2019ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டதிருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கான அபராத தொகை மாற்றி அமைக்கப்பட்டது. புதிய அபராத தொகையை வசூலிக்க தமிழக அரசு 19.10.2022 அன்று அரசாணை வெளியிட்டது. அதன்படி சென்னை பெருநகர காவல் துறையால் புதிய அபராத தொகை வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அதிகரிக்கப்பட்ட அபராத தொகையினை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை, கணினி சேவையகத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளதால். சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறும் குற்றத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தின்படி புதிய அபராத தொகை இன்று (26.10.2022) முதல் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையில் புதிய விதிமுறைகளின்படி அமல்படுத்தப்படும் என்பது தெரிவித்து கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து ஒத்துழைப்பு நல்குமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

traffic rules in tamil

tamil nadu traffic fines

tamil nadu traffic police fine

without helmet fine in tamilnadu

no parking fine in chennai

chennai traffic rules

drink and drive fine in tamilnadu

chennai traffic police fine list

traffic fines in chennai

vehicle case checking tamilnadu

e-challan parivahan

parivahan e challan

police fine

tamil nadu traffic police fine online payment

online traffic fine check

traffic fine online payment

pay traffic fines online

traffic fine pay online

traffic fines online payment

traffic fines pay online

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback