Breaking News

முதல்வர் தொடங்கும் குட்டி காவலர் திட்டம் முழு விவரம்...

அட்மின் மீடியா
0

 கோவையில் குட்டி காவலர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

குட்டி காவலர் திட்டம் என்றால் என்ன:-

கோவையில் பள்ளி மாணவர்களைக் கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ள ‘குட்டி காவலர்’ எனும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார்.

சாலை விபத்துகளை தவிர்க்கவும், சாலை பாதுகாப்புக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உயிர் அமைப்பு, அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

அதன் ஒரு பகுதியாக தமிழக அரசுடன் இணைந்து, பள்ளி மாணவர்களைக் கொண்ட ‘குட்டி காவலர்’ எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.

போக்குவரத்து விதிமீறல் கூடாது என்று ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரை வற்புறுத்தி, உறுதிமொழி ஏற்க வைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்  இந்த திட்டத்தின்படி 

பள்ளி மாணவர்களுக்கு சாலை விபத்தால் ஏற்படும் பாதிப்புகள், 

சாலை விதிகள் 

தலைக்கவசம் அணிவதன் அவசியம்

சீட் பெல்ட் அணிவதன் அவசியம்

அதிவேகமாக வாகனத்தை ஓட்டக்கூடாது என விழிப்புணர்வு ஏற்டுத்துதல்

வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசினால் ஏற்படும் பாதிப்புகள் என அனைத்தும் அவர்களுக்கு விளக்கப்படும் மேலும்  சாலை பாதுகாப்பு உறுதிமொழியை குழந்தைகள் எடுப்பார்கள்

சோதனை முயற்சியாக, 40 பள்ளிகளில் தொடங்கப்பட்ட இந்த பாடத்திட்டம், 2022-23ம் கல்வியாண்டு முதல் கோவை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

வரும், 12ம் தேதி காலை, 10:15 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்சிங் முறையில், சென்னையில் இருந்து இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.  மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடத்திட்டங்கள் அடங்கிய ஆசிரியர் விளக்க கையேடுகளை இன்று முதல்வர் வெளியிடுகிறார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback