Breaking News

புதுச்சேரியில் இரண்டு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி..!

அட்மின் மீடியா
0

 புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நடத்தும் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்


தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 2-ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 

இந்நிலையில் புதுச்சேரியில் அக்டோபர் 2 ம் தேதி அன்று புதுச்சேரி காமராஜர் சாலையில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கடலூர் சாலையில் உள்ள சிங்கார வேலர் சிலை அமைந்துள்ள இடத்தில் நிறைவடைகிறது.

மேலும் காரைக்காலில் நாளை மாலை 4 மணிக்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அணிவகுப்பு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கடற்கரை சாலை சென்றடைந்து நிறைவுபெறுகிறது.  இந்த ஊர்வலம் அமைதியாக நடைபெற கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback