Breaking News

மாநில அரசுகள் தொலைக்காட்சி ஒளிபரப்ப தடை.! மத்திய அரசு திடீர் உத்தரவு.!Ban State Govt Television

அட்மின் மீடியா
0

மாநில அரசுகள் இனி தொலைக்காட்சி மற்றும் அது குறித்த சேவைகளை வழங்க தடை விதிக்கப்படுகிறது எனவும், இனி அவை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே ஒளிபரப்பில் உள்ள சேனல்கள் பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 

மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் தடைவிதித்து ஒன்றிய அரசு பிறப்பித்துள்ள உத்தரவால் தமிழ்நாடு அரசு கேபிள் மற்றும் கல்வி தொலைக்காட்சி, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் எனவும் மாநில அரசுகள் சார்பில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சேனல்களின் நிறுவனங்கள் 2023 டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் அதனை நிறுத்தி கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது..

தமிழக மாநில அரசு சார்பில் தமிழக அரசு கேபிள் மற்றும் கல்வி தொலைக்காட்சி ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback