மேற்க்கு வங்கம் துர்கா பூஜை சிலைக் கரைப்பின் போது ஆற்றில் திடீர் வெள்ளம் 7 பேர் பலி வைரல் வீடியோ
மேற்கு வங்கத்தில் ஜல்பைகுரியில் மால் ஆற்றில் நேற்று துர்காபூஜை முடித்து சிலை கரைப்பு நிகழ்வு நடந்தது அப்போது திடீரென ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு 40க்கும் மேற்பட்டோர் அடித்து செல்லப்பட்டனர்.
இதைக் கண்ட மக்கள் அலறி கூச்சலிட்டனர். தண்ணீரில் தத்தளித்த மக்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றுமாறு அலறினாலும் பலர் உயிரிழந்தனர். விபத்து நடந்த உடனேயே, மீட்புப் பணிகள் தொடங்கியதுடன், சிலை கரைக்க வந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இதுவரை 7 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது, காயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர் மேலும் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்க மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
துர்கா சிலைகளைக் கரைகளைச் சென்று பேர் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆற்றில் துர்கா பூஜை சிலைக் கரைப்பு சம்பவத்தின்போது மக்கள் அடித்து செல்லப்பட்ட காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
வைரல் வீடியோ:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ