Breaking News

புதுச்சேரியில் போராடிய மின்துறை ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர் பேர் நள்ளிரவில் கைது

அட்மின் மீடியா
0

புதுச்சேரியில் போராடிய மின்துறை ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர் பேர் நள்ளிரவில் கைது


புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. கடந்த  சிலநாட்களுக்கு முன்பு புதுச்சேரி மின்சார வாரிய மின்சார வினியோகத்தை 100 சதவிகிதம் தனியாருக்கு வழங்குவதற்கான டெண்டர் அறிவிப்பினை புதுச்சேரி அரசு அதிரடியாக வெளியிட்டது. 

அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 28ம் தேதி பணிகளை புறக்கணித்து மின்வாரிய ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.  ஆளுநர் தமிழிசை போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக துணை ராணுவப் படை வரவழைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். 

இதனைத்தொடர்ந்து நேற்று இரவு 10:30 மணிக்கு அங்கு வந்த துணை தாசில்தார் பாலமுருகன், ஒலிபெருக்கி மூலம் இங்கு போராட்டம் நடத்துவது சட்ட விரோதம். 10 நிமிடங்களில் கலைந்து செல்ல வேண்டும். தவறினால் அனைவரும் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்தார். ஆனால், போராட்டக்குழுவினர் எவரும் கலைந்து செல்லவில்லை

அதனைத் தொடர்ந்து இரவு 10:50 மணிக்கு போலீசார், மத்திய அரசின் அதிவிரைவு அதிரடிப்படையினரும், அதிரடியாக மின்துறை அலுவலக கேட்டை திறந்து, மின் துறை ஊழியர்களை கைது செய்ய முயன்றனர். உடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தாங்களாகவே கைதாகினர். அவர்களை போலீசார், கோரிமேட்டில் உள்ள போலீஸ் சமுதாயக்கூடத்திற்கு அழைத்து சென்றனர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback