Breaking News

நவம்பர் 3ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!thanjavur local holiday

அட்மின் மீடியா
0

 மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவினை முன்னிட்டு வரும் 3.11.22 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார். 



தஞ்சாவூர் பெரிய கோயிலை எழுப்பிய ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஐப்பசி சதய நட்சத்திரத்தில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜராஜசோழனின் 1037ஆவது சதய விழாவை முன்னிட்டு நாளை தஞ்சாவூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 3ம் தேதி வியாழக்கிழமை, தஞ்சையில் ராஜராஜ சோழனின் சதய விழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.

thanjavur

DISTRICT COLLECTOR ANNOUNCES LOCAL HOLIDAY


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback