25 ம்தேதி இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் தமிழகத்திலும் தெரியும் solar eclipse 2022
அக்டோபர் 25 அன்று ஒரு பகுதி சூரிய கிரகணம் உருவாக உள்ளது சூரியன், சந்திரன் மற்றும் பூமி கிட்டத்தட்ட ஒரு நேர்கோட்டு அமைப்பில் வருகின்றன, இதன் மூலம் பூமியில் இருந்து சூரிய ஒளி படாமல் சந்திரனைக் காணலாம்.மேலும் இந்த 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் இதுவாகும்
தீபாவளி பண்டிக்கைக்கு மறுநாள் வரும் 25-ந் தேதி சூரிய அஸ்தமனத்துக்கு முன், பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும் என்றும், இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் இதை பார்க்க முடியும் என்று மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கு மறு நாளான அக்டோபா் 25-ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழவுள்ளது.சூரிய கிரகணம் என்றால் என்ன?
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது பூமியில் இருந்து பார்த்தால் சூரியன் முழுமையாகவே, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் இதைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம். பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.
முழு சூரிய கிரகணம்,
முழுவதுமாக சூரியனை சந்திரன் மறைக்கும் போது பூமி இருளாகும் இது முழு சூரிய கிரகணம் எனப்படும்.
அதேபோல் சந்திரன் சூரியனுடைய ஒரு பகுதி மட்டும் மறைக்கும் போது ஏற்படுவது பகுதி நேர சூரியகிரகணம் ஆகும்.
பகுதி சூரிய கிரகணம்
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரக்கூடிய சந்திரன் சூரியனின் ஒரு பகுதியை மட்டுமே மறைக்கும். இதன் காரணமாக, சூரியனின் ஒரு பகுதி சந்திரனால் மறைக்கப்படும். அதனால் பகுதி சூரிய கிரகணம் என்று குறிப்பிடப்படுகிறது.
வளைய சூரிய கிரகணம்:
சில நேரங்களில் நிலவினால் சூரியனை முழுவதுமாக மறைக்க முடியாது. நிலவு மறைக்கப்பட்ட பகுதி கறுப்பாகவும் அதன் விளிம்புகள் நெருப்பு வளையம் போலவும் தோன்றும் இதுதான் வளைய சூரிய கிரகணம்.
கிரகண நேரம்:-
இந்தியாவில் சூரிய கிரகணம் மாலை 4 மணி 29 நிமிடங்களுக்குத் தொடங்கி இதனுடைய உச்சகட்ட மறைப்பு நிலை மாலை 5 மணி 30 நிமிடங்களுக்கும், சூரியன் மறையும்போது 5 மணி 48 நிமிடமுமாகும்.
கிரகண நேரத்தில் செய்யக்கூடாதவைகள்:-
கிரகண சமயத்தில் கர்ப்பிணிகள் வெளியில் செல்லக்கூடாது.
கிரகண நேரத்தில் உணவு சாப்பிடக்கூடாது.
கடினமான கனமான பொருட்களை தூக்கக் கூடாது.
நோயாளிகளும் கிரகண நேரத்தில் வெளியே செல்லக்கூடாது. கிரகணத்தின்போது ஏற்படும் சூரியனின் கதிர்வீச்சு உடலில் படும்போது பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்கவே, சூரிய கிரகணத்தின்போது, வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.
சூரிய கிரகணத்தின் போது வெறும் கண்களால் கிரகணத்தை பார்க்கக் கூடாது.
சூரிய கிரகணத்தை பார்ப்பது எப்படி:-
இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பாா்க்கக்கூடாது. தொலைநோக்கி அல்லது படச்சுருள்களைக் கொண்டு பாா்க்கக்கூடாது. சூரிய வெளிச்சத்தைக் குறைக்கும் தன்மையுடைய சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்தும் பாா்க்கலாம்.
நேரலையில் பார்க்க:-
சூரிய கிரகணத்தை காண்பதற்கு, கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வு மையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பொதுமக்கள் நேரடியாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர் எபினேசர் தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்