Breaking News

21ம் நூற்றாண்டில் மதத்தின் பெயரால் வெறுப்பு பேச்சுக்கள் உச்சநீதிமன்றம் கவலை - புகார் வரும் வரை காத்திருக்காமல் நடவடிக்கை எடுக்க உத்தரவு Don’t wait for complaints to act against hate speech

அட்மின் மீடியா
0

நாம் 21ம் நுாற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், மதத்தின் பேரால் நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம் என்பது தெரியவில்லை. நாட்டில் வெறுப்பை பரப்பும் மதவாத பேச்சுகள் அதிகரித்துவிட்டது. இந்த வெறுப்புணர்வு பேச்சுகளை ஒடுக்க மத்திய அரசு தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும். என நீதிபதிகள் உத்தரவு

தற்போது நாடு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து கொண்டு வருகின்றது இந்நிலையில் உத்திரபிரதேசம் மற்றும், உத்ரகாண்ட்டில் இந்த சம்பவங்கள் மிகவும் அதிகரித்துவிட்டது என்றும் முஸ்லீம் மக்களுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்பைக் கக்கும் பேச்சுக்களை பேசுவோர் மீது உபா சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்கும்படியும் சுதந்திரமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி ஷாஹீன் அப்துல்லா  என்ற பத்திரிகையாளர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

இந்த மனு, நீதிபதிகள் கேஎம் ஜோசப், ரிஷிகேஷ் ராய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் ஷாஹீன் அப்துல்லா சாா்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்

அப்போது அவர் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சும், வன்முறையும் ஆளும் கட்சியினரின் நேரடி மற்றும் மறைமுகமான ஆதரவுடன் மேற்கொள்ளப்படுகின்றன. அதனை தடுக்க சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும் என்று கோரினாா்.வலியுறுத்திய கபில் சிபல் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கெனவே நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், வெறுப்புப் பேச்சுகளை முன்கூட்டியே தடுப்பதற்கான நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொள்ள வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனினும், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு தொடர்ந்து அதிகரிக்கும் காரணமாகவே, தற்போது மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்

அப்போது நீதிபதிகள் 

நாட்டில் வெறுப்புச் சூழல் நிலவி வருவதால் புகார் மிகவும் தீவிரமானது. இது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசியலைப்பு சட்டம் பிரிவு 51-ஏ கூறுகிறது. 

ஆனால் நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மதத்தில் பெயரால் நாம் எங்கு சென்று கொண்டு இருக்கிறோம். பல்வேறு மதங்களை ஏற்றுக்கொண்டுள்ள நாட்டில் வெறுப்பை தூண்டும் மதவாத பேச்சுகள் கவலை அளிக்கின்றன. 

வெறுப்பை தூண்டும் பேச்சுகள் தொடர்பாக முறையாக புகார் வரும் வரை காத்திருக்காமல், காவல்துறை மற்றும் மாநில அரசுகள் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் 

அடிப்படை உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்க வேண்டிய கடமை கோர்ட்டுக்கு இருக்கிறது. வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் காவல் துறை டி.ஜி.பி.க்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். என உத்தரவிட்ட நீதிபதிகள் ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் சோ்த்து இந்த வழக்கும் சேர்த்து வேறு அமா்வால் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனா். 

TAGS:

supreme court orders action against hate speech

hate speech

Don’t wait for complaints to act against hate speech 

Supreme Court orders action against hate speech

Hate Speech Crimes Don’t wait for complaints

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback