உலகம் முழுவதும் பல நாடுகளில் 2 மணிநேரம் செயலிழந்த வாட்ஸ்அப் மீண்டும் செயல்படத் தொடங்கியது WhatsApp
அட்மின் மீடியா
0
பேஸ்புக்கின் மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் அப் இந்தியா உட்பட பல நாடுகளில் முற்றிலுமாக செயலிழந்துள்ளது.இதனால் வாட்ஸ்அப்ப்பில் மெசேஜ் செய்ய முடியவில்லை என்று வாட்ஸாப் பயனர்கள் ட்விட்டர் மற்றும் முகநூலில் கருத்து தெரிவித்திருந்தார்கள்
செயலிழந்த வாட்சப்பை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்திருந்தது .வாட்ஸ் அப் சேவை திடீரென முடங்கியதால் வாட்ஸ் -அப் மூலம் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் பயனாளர்கள் தவித்து வந்தனர்.சுமார் 2 மணிநேரம் கழித்து வாட்ஸப் மீண்டும் செயல் படதுவங்கியது
Tags: தொழில்நுட்பம்