அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் – UGC உத்தரவு
அட்மின் மீடியா
0
கல்லூரிகளில் நடக்கும் ராகிங்கைத் தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், வகுப்பறைகள், விடுதிகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை மணியையும் முக்கிய இடங்களில் பொருத்த வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவில்
நாடு முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம்
ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என ஒவ்வொரு மாணவரும் www.antiragging.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்
ராகிங்கை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு வாசகங்களையும் இடம் பெற செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது
Tags: இந்திய செய்திகள் கல்வி செய்திகள்