Breaking News

ரயில் வரும்போது நடந்து செல்வது போல் எடுத்த வீடியோ ரயில் மோதி விபத்து வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

இன்ஸ்டாவில் வீடியோ போட வேகமாக செல்லும் ரயில் முன்பு நடந்து செல்வது போன்று வீடியோ எடுத்த இளைஞரை ரயில் மோதி விபத்து



தெலுங்கானா மாநிலம் ஹனுமகொண்டாவில் இன்ஸ்டா மோகத்தால் வேகமாக செல்லும் ரயில் முன்பு வீடியோ எடுக்க மூயன்று ரயிலில் அடிபட்டு இளைஞர் சுருண்டு விழுந்தார். 

தெலுங்கானா மாநிலம்  ஹனுமகொண்டா மாவட்டம் வட்டேபள்ளியைச் சேர்ந்த அஜய் என்பவர் பிளஸ் 1 படித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை  விடுமுறை என்பதால் நண்பர்களுடன் வட்டேபள்ளி ரயில் பாதைக்கு சென்றுள்ளார்கள் அங்கு  இன்ஸ்டாவில் வீடியோ போட வேகமாக செல்லும் ரயில் முன்பு நடந்து செல்வது போன்று வீடியோ எடுக்கும்படி கூறியுள்ளார். 


நண்பர்களும் வீடியோ எடுத்து கொண்டுருந்த போது, ​​வேகமாக வந்த ரயில் அஜய் மீது பலமாக மோதியது. இதில் அஜய் சுருண்டு விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக நண்பர்கல் ரயில்வே காவலர் உதவியுடன் 108 ஆம்புலன்சில் எம்ஜிஎம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/IndiaNewsDigest/status/1566459418211807232

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback