Breaking News

பூமி மீது மோத வந்த சிறுகோள் மீது விணகலத்தை மோதி பாதையை மாற்றிய நாசா- விண்வெளி வீடியோ

அட்மின் மீடியா
0

 சிறுகோள் மீது முதல் முறையாக விண்கலத்தை மோதி வெற்றி பெற்றுள்ளது நாசா

விண்னெளியில் கால்பந்து மைதானம் அளவுள்ள Dimorphos எனும் சிறுகோள் மீது  விண்கலத்தை மோதி அதன் பாதையை மாற்றியுள்ளது

பூமியை நோக்கி சிறுகோள் மோத வந்தால் எப்படி தடுப்பது என்பதற்கான சோதனை இதுவாகும் என நாசா கூறியுள்ளது



பூமியை சுற்றி வரும் எதிர்கால அச்சுறுத்தல்களைத் தவிர்க்க அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு கடந்த ஆண்டு அனுப்பியுள்ளது இந்த விண்கலத்தை ஏவுவதன் நோக்கம் விண்வெளியில் சுற்றும் சிறுகோள் ஒன்றை தாக்கி அதன் பாதையை மாற்றுவதே ஆகும். இந்த பணியின் பெயர் இரட்டை சிறுகோள் திசைமாற்ற சோதனை (Double Asteroid Redirection Test - DART) என்று நாசா தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் விண்வெளியில் சுற்றி வரும் சிறுகோள் மீது நாசாவின் விண்கலம் மோதும் அரிய சோதனை இன்று நடைபெற்றுள்ளது. விண்வெளியில் சுற்றிவரும் டிமோர்பாஸ் என்ற  குறுங்கோள் சுமார் 525 அடி அளவிலானது. இந்த விண்கல் 2500 அடி அகலம் கொண்ட டிடிமோஸ் என்ற சிறுகோள் ஒன்றை சுற்றி வருகிறது.

இந்த சிறுகோள்ச்1996 இல் அரிசோனா பல்கலைக்கழகத்தில் விண்வெளி கண்காணிப்பு திட்டத்தினை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. 

டிடிமோஸ் பைனரி என்ற சிறுகோள் மீது இந்த விண்கலம் மணிக்கு 24,000 கிமீ வேகத்தில் மோதும்.பூமியை சிறுகோள்கள் தாக்கும் அபாயத்தை முறியடிக்கும் வகையில், நாசாவின் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் லிசியாகியூப் எனப்படும் சிறிய செயற்கைக்கோள் ஒன்று, குறுங்கோளில் இருந்து 25 முதல் 50 மைல்களுக்குள் சில நிமிடங்களில் பறக்கும். அப்போது இந்த விபத்தினால் உண்டாகும் சேதங்கள் மற்றும் மாற்றங்கள் ஆகியவற்றை படம்பிடித்துக்காட்டும்.

இந்த அரிய வரலாற்று சாதனையை நாசா நிகழ்த்தியுள்ளது அதன் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது

வீடியோ பார்க்க:-

https://twitter.com/NASA/status/1574546758822084608

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback