Breaking News

ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல் கடன் வழங்கும் லோன் ஆப்கள் களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

அட்மின் மீடியா
0

ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக கடன் வழங்கும் லோன் ஆப்களை ஒடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்துக்கு பின் முடிவு எடுக்கப்பட்டது. எந்தெந்த கடன் செயலிகள் செயல்படலாம் என ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கும் செயலிகள் மட்டுமே செயல்பட முடியும்.ரிசர்வ் வங்கி அனுமதி பெறாத செயலிகளை ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்க மத்திய ஐடி அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

லோன் செயலிகளின் மூலம் கடன் வாங்கும் போது. கடன் பெறுபவருடைய செல்போனில் இருக்கும், தொடர்பு எண்கள், போட்டோ, தனிப்பட்ட விவரங்களை அந்த செயலிகள் சேகரித்து வைத்துக்கொள்ளும். கடன் வாங்கும் தொகையில் ஏறக்குறைய 30 சதவீதம் பணத்தை பிராசஸிங் பீஸ் ஆக பிடித்துக்கொண்டு மீதமுள்ள பணம் லோன் வாங்குபவரின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.இந்த பணத்தை திருப்பி கட்டுவதற்கு 7 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படும். 

உதாரணதிற்கு ரூ5.,000 லோன் அப்ளை செய்யும் பட்சத்தில் ரூ.3500 மட்டுமே லோன் பெறுபவருக்கு கிடைக்கும். ரூ.1500 பிராசஸிங் பீஸாக எடுத்துக்கொள்ளப்படும். 7 நாட்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.200/- முதல் ரூ.500/- வரை வட்டி ஏறிக் கொண்டே செல்லும். பத்து நாட்கள் வரை பணம் திருப்பி செலுத்தாதவர்களுக்கு போன் மூலம் மிரட்டல்கள் வர துவங்கும். 

மேலும் லோன் பெறுவோரின் நண்பர்கள், உறவினர்களின் செல்போனுக்கு கடன் பெற்ற நபர் குறித்து தவறாகவும், ஆபாசமாகவும் குறுஞ்செய்திகளை மோசடி கும்பல் அனுப்புகிறது.இதனால் இவ்வாறு லோன் செயலிகள் மூலம் கடன் பெறுவோர், வேலையிடங்களிலும், உறவினர்களிடத்திலும் பல்வேறு அவமானங்களுக்கு உள்ளாவதுடன் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பெரிய அளவிலான பண இழப்பும் ஏற்படுகிறது, 

எனவே பொதுமக்கள் அவசர தேவைக்காகவோ அல்லது வேறு ஏதும் காரணங்களுக்காகவோ இத்தகைய லோன் செயலிகளில் கடன் பெற வேண்டாம் என்று பல எச்சரிக்கை காவல் துறை அளித்தும் லோன் ஆப் மோசடியில் பலர் ஏமாறுகின்றார்கள்

எந்தவொரு ஒழுங்குமுறையும் இல்லாமல் ஏராளமான ஆன்லைன் கடன் ஆப்கள் செயல்பட்டு வருகின்றன. இது போல் ஆன்லைன் கடன் ஆப்களால் துன்புறுத்தப்பட்டு தற்கொலை செய்துகொண்டவர்களும் உள்ளார்கள்

டிஜிட்டல் கடன் ஆப்களில் பெரும்பாலானவை அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்படாத, சட்டவிரோதமானவை ஆகும்  இந்நிலையில் ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக கடன் வழங்கும் செயலிகளை ஒடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback