Breaking News

இறைவன் முன் அனைவரும் சமம்..யாருக்கும் முதல் மரியாதை கிடையாது...உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு.!

அட்மின் மீடியா
0

இறைவன் முன் அனைவரும் சமம் எனக் கூறியுள்ள ஐகோர்ட் கிளை, யாருக்கும் முதல் மரியாதை கிடையாது என உத்தரவிட்டுள்ளது. 


 

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே குலமங்கலத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்

எங்கள் ஊரில் உடையபராசக்தி அம்மன் கோயில் உள்ளது அந்த கோவில் தேர் திருவிழாவின் போது சிலர் முதல் மரியாதை அளிக்க வேண்டும் என தகராறு செய்தனர். இந்நிலையில் இந்த வருடம் செப்டம்பர் மாதம் 21ம் தேதி தேரோட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

சிலர் முதல் மரியாதை கேட்டு பிரச்சனை வரலாம் எனவே பிரச்னை ஏற்படாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சுப்பையா மனு செய்தார்.

இந்த வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இறைவன் முன் அனைவரும் சமம்.இறைவனை வழிபடுபவது தான் நோக்கமாக இருக்க வேண்டும். இறைவன் முன் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது. ஆகவே யாருக்கும் முதல் மரியாதை வழங்காமல் திருவிழாவை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Give Us Your Feedback