லோன் ஆப் மோசடி வடமாநில கும்பல் கைது முழு விவரம்
லோன் ஆப் மூலமாக மோசடியில் ஈடுபட்ட வட மாநிலங்களை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,
லோன் ஆப் மூலம் அதிக வட்டிக்கு பணம் கொடுக்கப்பட்டு வருகிறது.கடன் பெற்றவர்களின் செல்போன்களை ஹேக் செய்து போனில் இருக்கும் புகைப்படங்களை எடுத்து மார்ஃபிங் செய்து, ஆபாச புகைப்படங்களாக சித்தரித்து மொபைலில் உள்ள நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பியுள்ளனர். இதனால் பெரும் மன உலைச்சளில் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.இதனையடுத்து தனிப்படை அமைத்து லோன் ஆப் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
லோன் ஆப் மூலம் கடன் வாங்கிய நபர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி வந்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
உத்திரபிரதேசத்தை சேர்ந்த தீபக்குமார் பாண்டே (26), ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தேந்தர் தன்வர்(24) இவரது சகோதரி நிஷா(22), டெல்லியைச் சேர்ந்த பிரகாஷ் சர்மா (21) ஆகிய நான்கு அவர்களை கைது செய்துள்ளதாகவும் இவர்கள் வீட்டிலிருந்து மோசடி செய்து வரும் Work from Home குற்றவாளிகள் எனவும் தெரிவித்தார்.50 பேர் கொண்ட கும்பலாக இவர்கள் மோசடியில் ஈடுபட்டு வந்ததாகவும் மற்ற நபர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், 7 லேப்டாப்கள், 19 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் ஒரு மாதத்தில் மட்டும் 45 ஆயிரம் பேர் லோன் ஆப் மூலம் பாதிக்கபட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம் என்று கூறினார்.
Tags: தமிழக செய்திகள்