யூடியூபில் வியூஸ்களை அதிகரிக்க பொய்யான தகவலை பரப்பிய நபர் கைது…! முழு விவரம்
தற்போது பலரும் யூடியூப் சேனல் தொடங்கி நடத்தி வருகின்றனர். அதில் பலர் வருமானம் ஈட்டியும் வருகின்றனர். அந்த வகையில், சிலர் தாங்கள் அதிகமான வியூஸ் பெற வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களையும் பரப்பி வருகின்றனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நாகிரெட்டிப்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன் என்ற 22 வயதுடைய இளைஞர். இன்ஜினீரிங் படித்து முடித்து விட்டு தற்போது ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.இவரும் தனக்கென தனியாக Youtube சேனல் ஒன்று தொடங்கி நடத்தி வருகிறார்
அந்த யூடியூப் சேனலில் சப்ஸ்கிரைப் அதிகரிக்கவும், அதிகமான வியூஸ் வர தன் யூடியூப் சேனலில் மக்களை குழப்ப பிரபல தனியார் தமிழ் செய்தி தொலைகாட்சி சேனல்களின் செய்தியாளர்களின் செய்தி போல் தெரிய பொய் செய்திகளை முகப்பு பக்கத்தில் Thumbnail வைத்துள்ளார்
இந்நிலையில் கிழங்கு தாம்பரத்தை சேர்ந்த திமுக பிரமுகர் கார்த்திக் இவர் தனது செல்போனில் யூடியூப் பார்த்தபோது ஜனார்த்தனின் புதிய அறிவிப்புகள் எனும் யூடியூப் சேனலை பார்த்துள்ளார் அதில் உள்ள தகவல் உண்மையில்லை என்பதை அறிந்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து, ஜனார்தனன்(22) எனும் மென்பொறியாளரை வரவழைத்து கைது செய்தனர்.
விசாரனையில் மக்கள் அதிகம் கவரும் வண்ணம் வீடியோக்கள் போட்டால் வியூஸ் அதிகமாக வரும் அதனால் வருமானம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் பதிவிட்டதாகவும் தனியார் சேட்டிலைட் தொலைக்காட்சி லோகோவை போன்று பதிவிட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட யூடியூப் ஜனார்த்தனன் மீது அவதுறு பரப்புதல், இணைய தளத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தாம்பரம் குற்றவிய நடுவர் முன்பாக ஆஜர்படுத்தி புழல்சிறையில் அடைத்தனர்.
Tags: தமிழக செய்திகள்