Breaking News

ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்.8-ம் தேதி விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 08.09.2022 (வியாழக்கிழமை) அன்று கோவை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் உள்ளூர் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார். 


அதற்கு பதிலாக அவ்வலுவலகங்களுக்கு 17.09.2022 (சனிக்கிழமை) அன்று முழு பணிநாளாக செயல்படும் என்றும், உள்ளூர் விடுமுறை நாள் அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்

அதேபோல் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஓணம் பண்டிகையை முன்னிட்டு, 08.09.2022 தேதி வியாழன்கிழமை சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. 

மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதில் 17.09.2022 சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகின்றது.

ஓணம் பண்டிகைஆயினும் உள்ளூர் விடுமுறை நாளான 08.09.2022 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. க.அமிர்த ஜோதி அவர்கள் அறிவித்துள்ளார். 

மேலும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 8ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. 

மேலும் இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் 17- ஆம் தேதி சனிக்கிழமை அன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் போன்றே சென்னை மாவட்டத்துக்கும் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback