Breaking News

நவம்பர் 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி அளிக்க போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

நவம்பர் 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி அளிக்க போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி தராவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஊர்வலம் நடத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டு இருந்தது. 

ஆனால் இந்த ஊர்வலத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி வழங்காத நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியது. ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு செப்.28-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது

இந்நிலையில், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் தற்போது ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு, அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் அனுமதி மறுத்திருந்தார்கள்

இந்நிலையில், காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். முறையீடு செய்தது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சென்னை உயர்நீதிமன்றாத்தில் தாக்கல் செய்துள்ள தடை விதிப்புக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது. இதேபோல் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டுமென்ற உத்தரவை திரும்பப்பெறக் கோரி போலீசார் தாக்கல் செய்த சீராய்வு மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது

அதில் அக்.2-ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், நவம்பர் 6-ல் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

மேலும், அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ்-க்கு காவல்துறை அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் இந்த தேதியில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்தால் காவல்துறை, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback