Breaking News

தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி - சென்னை உயர் நீதிமன்றம்

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 

 


மேலும் நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் செப்டம்பர் 28-க்குள் தமிழக காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.சுதந்திரதின 75 ஆம் ஆண்டு , அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2 ஆம் தேதி அணிவகுப்புக்கு அனுமதி கோரி சென்னையை சேர்ந்த சுப்ரமணியன் உள்ளிட்ட 9 பேர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதற்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு செப்.28-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அவர்களது உடை அணிந்து, ஊர்வலம் செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback