Breaking News

இரவிலும் தேசிய கொடியை பறக்கவிடலாம் - மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0


நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு, தேசியக் கொடியை இரவிலும் பறக்க விடலாம்' என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை பொதுமக்கல் அனைவரும் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் 'வீடு தோறும் மூவர்ணக்கொடி' என்ற பிரசாரம் துவக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுவாக நமது தேசியக்கொடியை சூரிய உதயத்தில் இருந்து பறக்க விடலாம், சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக இறக்கி விட வேண்டும். இதுதான் சட்ட நடைமுறை. ஆனால் இப்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலர்களுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடும் வகையில், தேசியக் கொடியை இரவிலும் பறக்க விடலாம். மேலும், இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பருத்தி, பாலியஸ்டர், பட்டு, காதி துணிகளால் ஆன தேசியக்கொடிகளையும் பயன்படுத்தலாம். வரும் ஆக., 15ல் அனைத்து பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் கண்டிப்பாக தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும். என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback