மத்திய சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி திடீர் ராஜினாமா!!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் வரும் ஜூலை 18ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக பாஜக கூட்டணி தரப்பில் திரெளபதி முர்மு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் மேலும் இதனைத்தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவர் பொறுப்புக்கும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Tags: இந்திய செய்திகள்