Breaking News

டிவிட்டரில் மாட்டுகறி பதிவிட்ட நபர், தேவையற்ற பதிவுகளை தவிர்க்க சொன்ன சென்னை காவல்துறை - நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

நாம் தமிழர் கட்சியின் மாணவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் அபூபக்கர் தான் சாப்பிட்ட மாட்டுக்கறியை புகைப்படம் எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த ட்விட்டினை அவர் யாருக்கும் டேக் செய்யாமல் வெறும் புகைப்படத்தை மட்டுமே பகிர்ந்து இருந்தார்



அதற்க்கு  சென்னை மாநகராட்சி காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து கமெண்ட் செய்து ட்வீட் செய்யப்பட்டு உள்ளது அந்த கமெண்ட்டில் இத்தகைய பதிவு இங்கு தேவையற்றது. தேவையற்ற பதிவுகளை தவிர்க்க வேண்டும்  என அதில் சொல்லப்பட்டு இருந்தது

இந்த தகவல் இணையத்தில் பரவியது பலரும் ஒருவர் தான் விரும்பிய அல்லது உண்ணும் உணவை சமூக வலைதளங்களில் பதிவிட முழு உரிமை இருக்கிறது. ஆனால், மாட்டுக்கறி உணவை பதிவிட்டது எப்படி தேவையற்ற பதிவாக இருக்க முடியும், மற்றவரின் உணவு விசயத்தில் சென்னை காவல்துறை எப்படி தலையிடலாம் என அந்த பதிவிற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது

சென்னை மாநகராட்சி காவல்துறையின் ட்விட்டர் பற்றி திமுகவை சேர்ந்த தருமபுரி எம்பி செந்தில்குமார் அவர்கள் தன் டிவிட்டர் பக்கத்தில் 

யார் இந்த அக்கவுண்ட்டை உபயோகிப்பது? 

அந்த பதிவில் என்ன தவறு உள்ளது? 

என்ன பதிவிட வேண்டும் என்ன சாப்பிட வேண்டும் என்று சென்னை போலீஸ் எதன் அடிப்படையில் இந்த தேவையற்ற அறிவுரை. கொடுத்த நூற்றுக்கணக்கான abusive/பொய் பதிவுகளுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார். 

உடனடியாக அந்த பதிவை சென்னை மாநகராட்சி காவல்துறை  டிலைட் செய்து விளக்கம் அளித்துள்ளது


அதில் தாங்கள் பதிவிட்ட ட்வீட் சென்னை காவல் துறையின் ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்யப்பட்டதால், பொது மக்களின் பயன்பாட்டுக்கான ட்விட்டர் பக்கத்தில் தனிப்பட்ட பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த பதிவு செய்யப்பட்டது. ஆனால் தவறுதலாக தங்களுடைய பக்கத்திலேயே இது பதிவிடப்பட்டதற்கு வருந்துகிறோம். இது தங்களுடைய தனிப்பட்ட உணவுத்தேர்வினைக் குறித்தல்ல ” என விளக்கம் அளித்திருந்தது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback