உணவகங்கள் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
உணவகங்கள் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
நுகர்வோர் உரிமைகளை மீறும் வகையிலும், முறையற்ற வர்த்தக நடைமுறையை தடுக்கும் வகையிலும், உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
அதில் உணவு உண்டதற்கான விலை ரசீதுகளில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது என்றும், வேறு எந்த ஒரு பெயரிலும் சேவை வரியை வசூலிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சேவை வரியை செலுத்துமாறு உணவகங்கள் நுகர்வோரைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், சேவை வரியை செலுத்துவது நுகர்வோரின் விருப்பம் என்பது அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், 1915 அல்லது தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் மொபைல் செயலி மூலம் நுகர்வோர் புகார் அளிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் விரைவான தீர்வுகாண www.e-daakhil.nic.in என்ற இணையதளம் மூலம் புகார் பதிவு செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமும் நுகர்வோர் புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. சேவை வரி விதிப்பது தொடர்பாக தேசிய நுகர்வோர் உதவி எண்ணிற்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உணவகங்கள் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
வாடிக்கையாளர்களிடமிருந்து உணவகங்கள் தனியாக சேவை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து டெல்லி உயர்நீதிமன்றம் உணவகங்கள் தனியாக சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
Tags: இந்திய செய்திகள்