தந்தையை தாக்கியவரை 7 மாதங்களுக்கு பின்பு நண்பர்களுடன் துப்பாக்கியால் சுட்ட சிறுவன் சிசிடிவி வீடியோ
டெல்லியில் உள்ள ஜஹாங்கீர் பகுதியில் தனது தந்தையை 7 மாதங்களுக்கு முன்பு தாக்கியதால் தனது நண்பர்களுடன் வந்து தந்தையை தாக்கியவரை துப்பாக்கியால் சுட்ட சிறுவர்கள் சிசிடிவி வீடியோ
டெல்லி ஜஹாங்கிபூர் பகுதியில் உள்ள எச்4 பிளாக் குடியிருப்பில் வசித்து வருபவர் ஜாவத். இவர் தனது குடியிருப்பு பகுதியில் உள்ள பூங்காவிற்கு அருகே அமர்ந்திருந்தார். அப்போது, அவருக்கு அருகில் 4 சிறுவர்கள் வந்துள்ளனர். திடீரென ஒரு சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து ஜாவத் முகத்திற்கு நேராக சுட்டதில் ஜாவத் நிலைதடுமாறி விழுந்தார். மறுநொடியே 4 சிறுவர்களும் அங்கிருந்த ஓட்டம் பிடித்தனர்.
துப்பாக்கி சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜாவத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் ஜாவத்தின் கண்ணில் குண்டடிப்பட்டுள்ளது.
துப்பாக்கியால் சுட்ட சிறுவனின் தந்தையை 7 மாதங்களுக்கு முன்பு ஜாவத் தாக்கியுள்ளார். அதற்கு பழி வாங்க தனது நண்பர்களுடன் சென்று ஜாவத்தை சுட்டது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/ANI/status/1548173460555198464
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ