கல்லூரி மாணவிகள் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் 18 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஜூலை 10 ஆம் தேதியுடன் அவகாசம் முடிந்த நிலையில் ஜூலை 18 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாதாமாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் அரசு பள்ளியில் படித்த மாணவிகள் இத்திட்டத்தில் பயன் பெறுவர்.இந்த திட்டத்தின் கீழ் மாணவிகள் பயன்பெற இந்த இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக விண்ணபிக்க வேண்டும்.
மாணவிகளுக்கு வங்கிக்கணக்கில் மாதம் ரூ.1000 யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு!
https://www.adminmedia.in/2022/06/1000_27.html
கல்லூரி மாணவிகள் மாதா மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி
https://www.adminmedia.in/2022/06/1000_25.html
கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் இவர்களுக்கு கிடையாது -தமிழக அரசு.!
Tags: தமிழக செய்திகள்