Breaking News

இனி வெளிநாட்டில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பலாம் - மத்திய அரசு

அட்மின் மீடியா
0

வெளிநாடுகளில் வசிப்பவர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வரை எந்த கட்டுப்பாடும் இன்றி பணம் அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

 


தனி நபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை மீறி பணம் பெறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

இந்த வெளிநாடு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்

வெளிநாடுகளில் வசிப்பவர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு ஒரு நிதியாண்டில் 1 லட்சம் ரூபாய் மட்டுமே பணம் அனுப்ப முடியும். தற்போது இந்த தொகை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கட்டுப்பாடு இன்றி பணம் அனுப்பலாம் 

மேலும் நிர்ணயித்த அளவை விட கூடுதலாக பணம் பெரும் இந்தியர்கள் 30 நாட்களுக்குள் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற காலக்கெடுவையும் 90 நாட்களாக மாற்றியுள்ளது.


 


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback