Breaking News

FACT CHECK இந்த வீடியோ எங்கு நடந்தது!! எப்போது நடந்தது!! எதற்காக நடந்தது முழு விவரம்

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்   அஸ்ஸலாமு அலைகும் ஈரானில் நபி ஸல்லல்லாஹு அலைக்கு இந்திய மண்ணில் ஏறபட்ட களங்கத்தை எதிர்த்து பெரிய ஊர்வலம் கோடி கணக்கில் மக்கள் கலந்துகொண்டனர் நமது பத்திரிகை கள் கண்டு கொள்ள வில்லை என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-

அஸ்ஸலாமு அலைகும் ஈரானில் நபி ஸல்லல்லாஹு அலை க்கு இந்திய மண்ணில் ஏறபட்ட களங்கத்தை எதிர்த்து பெரிய ஊர்வலம் கோடி கணக்கில் மக்கள் கலந்துகொண்டனர் நமது பத்திரிகை கள் கண்டு கொள்ள வில்லை என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.

உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ தற்போது நடந்தது அல்ல என்றும் மேலும் கடந்த 11.11.2019 அன்று ஏமன் நாட்டில் முகமது நபி ஸல் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் வீடியோ அது என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 


முடிவு:-


ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback