Breaking News

பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..

அட்மின் மீடியா
0

பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது



பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறதுபொறியியல் கல்லூரி படிப்புகளில் பி.இ, பி.டெக் படிப்பு கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது. www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஜீலை 19 வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசின் உயர்கல்வித் துறை, தொழில் நுட்பக் கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள பொறியியற் கல்லூரிகளுக்கான மாணாக்கர்கள் சேர்க்கை தொடர்பான இணையவழி சேர்க்கை விண்ணப்பங்கள் (OnlineApplication) உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் 110 மையங்களில் செயல்படும் TNEA வசதி மையங்களில் (TNEA FACILITATION CENTRE TFC] இணையவாயிலாக பதிவேற்றம் செய்ய வசதிகள்  செய்யப்பட்டுள்ளன. .

அதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் அரசினர் பொறியியற் கல்லூரி வளாகத்தில், பொறியியற் கல்லூரி மாணாக்கர்கள் சேர்க்கை தொடர்பான வசதி மையம், செயல்பட உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. 

கல்லூரி வளாக முதலாம் நுழைவு வாயில் பகுதியில் உள்ள நூலக மற்றும் நெறிமுறைகளின்செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த TNEA வசதி மையம் கட்டிட வளாகத்தில் இந்த (TFC) வசதி மையம் 20.6.2022 முதல் தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் அடிப்படையில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும் எனவும், இந்த வசதி மையத்தில் அனைத்து கொரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வழிகாட்டுதல்கள் நெறிமுறைகள் அரசின் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் செயல்பட உள்ள இந்த பொறியியல் கல்லூரி மாணாக்கர்கள் சேர்க்கை வசதி மையத்தினை (TNEA TFC) பயன்படுத்தி மாணாக்கர்கள் தங்களது பொறியியல் கல்லூரிக்கான இணையதள விண்ணப்ப பதிவேற்றத்தினை மேற்கொள்ளவும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இப்பொருள் தொடர்பான தங்களது தெளிவான விபரங்களுக்கு https://www.tneaonline.org என்ற இணைய தளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அரசினர் பொறியியற் கல்லூரி, சேலம, தவிர வனவாசி அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் Thiagaraja பாலிடெக்னிக் கல்லுாரியிலும் TNEA வசதி மையங்கள செயல்படும் என தெரிவிக்கபடுகிறது

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback