Breaking News

அக்னிபத் திட்டம் என்றால் என்ன? இந்தியா முழுவதும் எதிர்ப்பு ஏன்...முழு விவரம்...

அட்மின் மீடியா
0

இந்தியாவில் பாதுகாப்பு படைக்கான ஆள்சேர்ப்பு திட்டமாக அக்னிபாத் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்படைகளில் இளைஞர்கள் 4 ஆண்டுகள் சேவையாற்ற முடியும். இதுதொடர்பான அறிவிப்பை முப்படை தளபதிகளுடன் சேர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்டார்.இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ராணுவத்தின் செலவு குறையும் என மத்திய அரசு அறிவித்துள்ளதுஆனால் இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால், இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 




அக்னிபத் திட்டம் என்றால் என்ன?

இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் 4 ஆண்டுகள் ராணுவத்தில் குறுகிய கால வீரராக (முப்படையில் ஏதாவது ஒன்றில்) சேர முடியும்.

அக்னிபாத் திட்டத்தில் இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். 

4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.

விருப்பம் இல்லை என்றால் 4 வருடத்திற்கு பின் வெளியேறலாம் விருப்பம் உள்ளவர்கள் நிரந்தரமாக சேர விண்ணப்பிக்கலாம்

இவர்கள் ஆபிசர் அல்லாத ரேங்கில் நிரந்தர பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

பெண்கள், ஆண்கள் இரு பாலினரும் சேர முடியும் 17.5 - 21 வயது கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி.

இந்த திட்டத்தின் மூலம் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

வருடம் செல்ல செல்ல சம்பளம் உயர்த்தப்படும்.

அதாவது 4வது வருடம் 40 ஆயிரம் ரூபாய் மாதம் சம்பளம் தரப்படும்.

வருமான வரி கிடையாது.

அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது. 

தனிப்பட்ட இன்சூரன்ஸ், 

மெடிக்கல் இன்சூரன்ஸ் வழங்கப்படும்.

இந்த 4 வருட ராணுவ பணி காலத்தில், ஏதாவது ராணுவ சண்டையில் காயங்கள் ஏற்பட்டால் அதற்கு 44 லட்சம் ரூபாய் வரை, காயத்தை பொறுத்து நிவாரணமாக வழங்கப்படும்.

எதிர்ப்பு ஏன்:-

ராணுவத்தில் சேர வேண்டும் என்பதற்காக நீண்ட காலமாக தாங்கள் முயற்சி செய்து வருவதாகக் கூறிய போராட்டக்காரர்கள், தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தின் வயது வரம்பு 17.5 ல் இருந்து 21 ஆக இருப்பதால் தங்களில் பலர் தகுதி இழப்பை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகத் தெரிவித்தனர். 4 ஆண்டுகளுக்கு பிறகு என்ன செய்வது என்று கேள்வி எழுப்பும் இளைஞர்கள், ராணுவத்தில் தங்களுக்கு நிரந்தரப்பணி வேண்டும் எனவும் இந்த திட்டத்தால், நிண்ட கால பணி வாய்ப்பும் கிடைக்காது, ஓய்வூதியமும் கிடைக்காது என தெரிவித்துள்ள அவர்கள், இது ஏமாற்றத்தை அளித்துள்ளதாகத் தெரிவித்தனர். எனவே, மத்திய அரசு இந்த திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்கள்

மேலும் ராணுவத்தில் சேரும் ஒரு நபர் தேர்ந்த வீரராக மாறுவதற்கு குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகிவிடும். ஆனால், இந்த திட்டத்தின்கீழ் சேரும் இளைஞர்களின் மொத்த பணிக்காலமே 4 ஆண்டுகள் தான். நான்கு ஆண்டுகளில் 75 சதவீத வீரர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு வடுவர். இந்தக் காலகட்டங்களில் போர் சூழல் ஏற்பட்டால், சிறப்பாக செயல்படும் குறைவான வீரர்களுடன் வலிமையான ராணுவம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

அதேசமயம் அக்னிபத் வீரர்கள் கலந்து கொள்வோருக்கான வயது வரம்பு 17லிருந்து 21-க்குள். எனவே 21-லிருந்து 25 வயதுக்குள்ளோர் பணி முடிந்து வீட்டுக்கு திரும்ப வந்து விடுவார்கள். புதிய வேலைக்கு முயற்சிக்க வேண்டிய வயதிலும் படிக்க வேண்டிய வயதிலும் உள்ள இளைஞர்கள் அவற்றுக்கான காலத்தில் ராணுவத்தில் இணைந்து விடுவார்கள்.வேலைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய வயதில், வேலையை இழப்பார்கள். புதிய வேலை தேட வேண்டியக் கட்டாயத்தில் இருப்பார்கள். புதிய வேலைக்கான படிப்போ திறனோ வளர்த்திருக்க மாட்டார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் இன்னும் அதிகமாகும்.

போராட்டம்:-

இந்நிலையில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பீகார், உத்தரபிரதேசத்தில் நேற்று ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள், மத்திய அரசின் திட்டத்துக்கு எதிராக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

பீகார் மாநிலம் முங்கர், ஜெஹானாபாத் ஆகிய பகுதிகளில் இளைஞர்கள் சாலை மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளானர். பேருந்து கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர்.போராடும் வீரர்கள் திடீரென சாலையில் இருந்த கற்களை எடுத்து காவல்துறையினர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் ரெயில் நிலையங்களுக்குள் நுழைந்த அவர்கள் கற்களை எடுத்து ரெயில்கள் மீது எதிர்ந்தனர்.

கைமூர் மாவட்டத்தில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா மாநிலங்களில் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.பல்வால் துணை ஆணையர் அலுவலகம் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராடிய இளைஞர்கள் வாகனங்களை எரித்தததாக வான்வழி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்கள்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback