Breaking News

பீகாரில் அக்னி பாத் திட்டத்துக்கு எதிர்ப்பு !! ரயிலுக்கு தீ வைப்பு...வீடியோ

அட்மின் மீடியா
0

இந்தியாவில் பாதுகாப்பு படைக்கான ஆள்சேர்ப்பு திட்டமாக அக்னிபாத் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்படைகளில் இளைஞர்கள் 4 ஆண்டுகள் சேவையாற்ற முடியும். இதுதொடர்பான அறிவிப்பை முப்படை தளபதிகளுடன் சேர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்டார்.



இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ராணுவத்தின் செலவு குறையும் என மத்திய அரசு அறிவித்துள்ளது

இந்நிலையில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பீகார், உத்தரபிரதேசத்தில் நேற்று ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள், மத்திய அரசின் திட்டத்துக்கு எதிராக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில், பீகார் மாநிலம் முங்கர், ஜெஹானாபாத் ஆகிய பகுதிகளில் இளைஞர்கள் சாலை மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளானர். பேருந்து கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர்.போராடும் வீரர்கள் திடீரென சாலையில் இருந்த கற்களை எடுத்து காவல்துறையினர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் ரெயில் நிலையங்களுக்குள் நுழைந்த அவர்கள் கற்களை எடுத்து ரெயில்கள் மீது எதிர்ந்தனர்.இந்நிலையில், கைமூர் மாவட்டத்தில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா மாநிலங்களில் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வால் துணை ஆணையர் அலுவலகம் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராடிய இளைஞர்கள் வாகனங்களை எரித்தததாக வான்வழி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்கள்

ராணுவத்தில் சேர வேண்டும் என்பதற்காக நீண்ட காலமாக தாங்கள் முயற்சி செய்து வருவதாகக் கூறிய போராட்டக்காரர்கள், தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தின் வயது வரம்பு 17.5 ல் இருந்து 21 ஆக இருப்பதால் தங்களில் பலர் தகுதி இழப்பை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், இந்த திட்டத்தால், நிண்ட கால பணி வாய்ப்பும் கிடைக்காது, ஓய்வூதியமும் கிடைக்காது என தெரிவித்துள்ள அவர்கள், இது ஏமாற்றத்தை அளித்துள்ளதாகத் தெரிவித்தனர். எனவே, மத்திய அரசு இந்த திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/ARanganathan72/status/1537359511144497153


வீடியோ பார்க்க:-

https://twitter.com/ANI/status/1537382702596251649

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback