Breaking News

கோவையில் இருந்து ஷீரடிக்கு முதல் தனியார் ரயில்!

அட்மின் மீடியா
0

பாரத் கவ்ரவ் திட்டம் மூலம் இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை கோவையில் வருகிற 14ஆம் தேதி தொடங்குகிறது. சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு பாரத் கவ்ரவ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய ரயில்வே துறையின் முதல் தனியார் ரெயில் தமிழகத்தின் கோவையிலிருந்து தனது முதல் சேவையை தொடங்குகிறது.

                                                                       கோப்பு படம்


இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட கால அட்டவணையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த ரயில் ஜூன் 14 அன்று கோவையிலிருந்து மகாராஷ்டிரா சாய்நகர் ஷீரடிக்கு முழுக்க முழுக்க தனியார் மூலம் இயக்கப்படுகிறது.கோவையில் இருந்து ஷீரடி வரை வருகிற 14ம் தேதி தொடங்க உள்ளது. 5 நாட்கள் பயணமாக இது அமைய உள்ளது

கோவையில் 14.07.2022 அன்று மாலை 6 மணிக்கு இந்த ரயில் புறப்படும். 

அதேபோல் 17.6.2022 அன்று காலை 7.25 க்கு சாய்நகர் ஷீரடியிலிருந்து புறப்பட்டு கோவைக்கு வந்து சேரும் என தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback