Breaking News

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் செய்ய உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்



சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.57 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 

ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். இன்று (21.06.2022) காலை 8.00 மணி நிலவரப்படி நீர் இருப்பு 23.48 அடியாகவும் கொள்ளளவு 3509 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து காலை 6.00 மணி நிலவரப்படி 550 கன அடியாக உள்ளது. 

தற்போது தென்மேற்கு பருவமழை காலத்தில் கடந்த சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் வெள்ள நீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் நடவடிக்கையாக, ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை இன்று பிற்பகல் (21.06.2022 12.00 மணியளவில் வினாடிக்கு வெள்ள நீர் போக்கி வழியாக 250 கன அடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு. திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback