சாய் பல்லவி வெளியிட்ட வீடியோ வன்முறை எந்த விதத்தில் நடந்தாலும் எந்த மதத்தில் நடந்தாலும் அது தவறு தான்
இந்த நிலையில் போட்டியில் தான் பேசியது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் இது போல் ஒரு வீடியோ வெளியிடுவது இது தான் முதல் முறை.
மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்நிலையில் தெலுங்கில் விராட பருவம் என்கிற படத்தை கைவசம் வைத்துள்ளார் சாய் பல்லவி. இப்படத்தில் நக்சலைட்டாக நடித்துள்ளார் சாய் பல்லவி. ராணா, பிரியாமணி, நிவேதா பெத்துராஜ் என பலர் நடித்துள்ள இப்படம் வருகிற ஜூன் 17-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரமோஷனுக்காக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது நடிகை சாய் பல்லவி
நான் ஒரு நடுநிலையான குடும்பத்தில் பிறந்தவள். என்னை பொருத்த வரை வன்முறை என்பது தவறான விஷயம். நான் நல்ல மனிதராக இருக்க வேண்டும் மக்களுக்கு துணையாக நாம் இருக்க வேண்டும். அதைத்தான் என் குடும்பம் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது. நீங்கள் மனிதராக இருந்தால் அதைத்தான் செய்ய வேண்டும்.
என்னை பொருத்தவரை காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் சொல்லப்பட்ட காஷ்மீர் பண்டிட்கள் கொலை மற்றும் மாடுகளை கொண்டு சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல கட்டாயப்படுத்தி தாக்குதல் நடத்தியது ஆகிய இரண்டிற்கு பெரிய வேறுபாடுகள் இல்லை.யாராக இருப்பினும் எந்த சூழ்நிலையாக இருப்பினும் ஒடுக்கப்பட்டவர்கள் நிச்சயம் பாதுக்கப்பட வேண்டும்.
வலது சாரி, இடது சாரி இதில் எது சரி என எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் நல்ல மனிதராக இருக்க வேண்டும் நீங்கள் நல்ல மனிதராக இருந்தால் அதைத்தான் செய்ய வேண்டும். காஷ்மீரி இந்து பண்டிட்கள் கொலை செய்யப்படுவதற்கு குரல் கொடுக்கும் மக்கள் இதற்கும் குரல் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு அவர் பேசி இருந்தார்
இந்த நிலையில் தான் அளித்த பேட்டியில் தான் பேசியது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் இது போல் ஒரு வீடியோ வெளியிடுவது இது தான் முதல் முறை. இதற்கு முன் தனது கருத்துக்களை பகிர மட்டுமே வீடியோ பதிவிட்டுள்ளேன். நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு வீடியோ வெளியிடுகிறேன்.
சில நாட்களுக்கு முன் நான் அளித்த பேட்டி பெரும் சர்ச்சை ஆக்கப்பட்டது.என்னை பொறுத்தவரை மனிதர்கள் அனைவரும் ஒன்றுதான். அதைத் தான் நான் தனது பேட்டியில் சொன்னேன்.
ஒரு குழந்தை பிறந்து தன் அடையாளத்தைக் கண்டு பயப்படும் நாள் இனி வராது என்று நம்புகிறேன். நாம் அதை நோக்கிச் செல்ல வேண்டாம் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்
இனம், மதம், சாதி, கலாச்சாரம், மொழி அடிப்படையில் பிரித்துப் பார்க்கக் கூடாது. எல்லோரின் உயிரும், உணர்வும் ஒன்று தான். நான் பயின்ற 14 வருட பள்ளி வாழ்க்கையில், ஒவ்வொரு நாளும் இந்தியர்கள் அனைவரும் சமம்.அனைவரும் என் உடன் பிறந்தவர்கள் என உறுதிமொழி எடுத்து அதுவே மனதில் பதிந்து விட்டது. சமீபத்தில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் டைரக்டர் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் இதையே தான் கூறினேன்.ஆனால் நான் சொன்னதை சிலர் தவறாக புரிந்து கொண்டார்கள். எனது முழு பேட்டியை கேட்காமல் ஒரு சிறு பகுதியை பார்த்துவிட்டு பதிவிட்டு உள்ளனர். நான் சொன்னதின் உண்மை தன்மையை அவர்கள் ஆராயவில்லை என்றார்.
நான் சொல்ல வந்தது வன்முறை எந்த விதத்தில் நடந்தாலும் எந்த மதத்தில் நடந்தாலும் அது தவறு. அதைக் கண்டிக்க வேண்டும். எனக்காக குரல் கொடுத்து ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எல்லோரும் அமைதியையும் அன்பையும் பெற வாழ்த்துகிறேன் மேலும் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
சாய் பல்லவி வீடியோ பார்க்க:-
https://www.instagram.com/tv/Ce8xMmbFQ70/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/tv/Ce8xMmbFQ70/?igshid=MDJmNzVkMjY=
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ