Breaking News

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு! பள்ளி நேரம் மாற்றியமைக்கப்படுகிறதா- அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் நாளை  திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், மாதிரி பள்ளிகளுக்கான வேலை நேரம் மற்றும் விழிகாட்டுதல்கள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.



கோடை விடுமுறை முடிந்து வருகிற 13-ஆம் தேதி நாளை மறுநாள் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதேபோல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்னதாகவே பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது

இந்நிலையில் பள்ளிகளின் வேலை நேரம் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பள்ளி தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே உடற்கல்வி ஆசிரியர்கள் வருகைதந்து மாணவர்களின் ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும்.

மதிய உணவு இடைவேளை முடிந்தபின் 20 நிமிடம் நூலகங்களில் சிறார் பருவ இதழ், செய்தித்தாள், நூல்களை வாசிக்க செய்ய வேண்டும்.

வாரம் ஒருநாள் நீதிபோதனை பாடவேளையில் மனநல ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும். 

அதற்குமுன் பெற்றோர் கூட்டம் நடத்தி குழந்தைகள் கல்வி செயல்பாடு குறித்து அவர்களிடம் சொல்ல வேண்டும்.

பள்ளிகள் தங்களின் அமைவிடம் போக்குவரத்து வசதிகளை கருத்தில்கொண்டு வகுப்புகள் தொடங்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம். வழிமுறைகளை முறையாக பின்பற்றவும் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மாநிலம் முழுவதும் பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைப்பது குறித்து தமிழக முதல்வரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று  அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback