Breaking News

நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் முழு விவரம்..

அட்மின் மீடியா
0

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர்.



நுபுர் சர்மாவை கைது செய்த கோரி மேற்கு வங்காளம், பஞ்சாப், குஜராத், உத்தர பிரதேசம், உத்தர காண்ட், கர்நாடகா ,தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தின் போது பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. 

பாஜக தேசிய செய்தித்தொடர்பாளராக இருந்த நூபுர் ஷர்மா கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நபிகள் நாயகம் குறித்து சர்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

சர்வதேச நாடுகளிலிருந்தும் நூபுர் ஷர்மாவுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தநிலையில் அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து பாஜக நடவடிக்கை எடுத்தது. 


டெல்லி:-

இந்த நிலையில், நேற்று (ஜூன் 10) டெல்லியில் உள்ள ஜமா மசூதியில் தொழுகை முடித்து வெளியில் வந்த ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி நூபுர் ஷர்மாவைக் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

நூபுர் ஷர்மாவுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும், கண்டன கோஷங்களை எழுப்பினர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.


ராஞ்சி

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற போராட்டத்தினை காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கட்டுப்படுத்தினர், இந்த தடியடியில் 12 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். இதனிடையே அப்பகுதியில் இணையசேவை துண்டிக்கப்பட்டதுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.


ஹவுரா

மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள உலுபெரியா பகுதியில் பாஜக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டது. மேலும் ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்றன

மேற்குவங்க மாநிலத்தின் ஹவுரா பகுதியில் வன்முறை வெடித்த நிலையில் அங்கு வரும் 13ம் தேதிவரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஹவுரா பகுதியில் பாஜக அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதனிடையே முகமது நபியை அவதூறாக பேசிய நுபுல் சர்மாவை தூக்கிலிட வேண்டுமென அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர், இம்தியாஸ் ஜலீல் தெரிவித்துள்ளார்.


உத்திர பிரதேசம்

உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தியவர்களை  போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்து உயர் அதிகாரிகளுடன் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவசர ஆலோசனை நடத்தினார்.

உத்தர பிரதேசத்தில் லக்னெள, சாஹாரன்பூர், மொராதாபாத் ஆகிய இடங்களில் உள்ள மசூதிகளுக்கு வெளியே இஸ்லாமியர்கள் வீதிகளில் ஆயிரக்கணக்கில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதுவரை மொத்தம் 136 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி பிரசாந்த் குமார் தெரிவித்தார்.


மகாராஷ்டிரா:-

மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் ஏஐஎம்ஐஎம் கட்சியினர் கண்டன பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து அங்கு நடந்த போராட்டத்தில் முஸ்லிம்கள் திரளாக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். 

அதேபோல் மகாராஷ்டிர நவி மும்பையில நூற்றுக்கணக்கான பெண்கள் பேரணியில் ஈடுபட்டனர். சோலாப்பூரில் ஏராளமானோர் திரண்டு முழக்கங்களை எழுப்பினர்.


வங்கதேசம்:-

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில்  ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்று, பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். டாக்கா நகரின் முக்கியமான மசூதியான பைத்துல் முகரம் மசூதிக்கு அருகே   முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஜூன் 16 அன்று கெராவ் இந்திய தூதரகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தவும் போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 


தமிழ்நாடு:-

தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் நேற்று  நுபுல் ஷர்மா, நவின் ஜிண்டால் இருவரையும் உபா சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மேலும் இறைத்தூதர் அவர்களை இழிவுப்படுத்திய தேசவிரோத பாசிச பயங்கரவாத நுபுர் ஷர்மா மற்றும் நவின் ஜிண்டாலைக் கண்டித்து தமிழ்நாடு த்வ்ஹீத் ஜமாத் சார்பாக சென்னையில் 9-6-2022 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


முகமது நபி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜகவினரை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தம்பரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்ட நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் முகமது நபி குறித்த அவதூறு கருத்து தெரிவித்த பாஜகவை சேர்ந்த நூபுர் ஷர்மா, நவீன் ஜிண்டாலை கைது செய்ய கோரி இஸ்லாமிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம் போடி கட்டபொம்மன் சிலை அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அதே போல் மதுரை மாவட்டத்தில் தமுமுக சார்பாக  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மேலும் புதுக்கோட்டை மீமிசலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலும் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டார்கள்

ஈரோடு மேற்கு மாவட்டம் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய சங்கபரிவார்களை UAPA சட்டத்தில் கைது செய்யக்கோரி தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்மாவட்டத் தலைவர் சம்சுதீன் தலைமையில்நடைப்பெற்றது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய சங்கபரிவார்களை UAPA சட்டத்தில் கைது செய்யக்கோரி தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத்தலைவர் உசேன் அலி தலைமையில் நடைப்பெற்றது.

திருவள்ளுவர் மேற்கு மாவட்டம் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய சங்கபரிவார்களை UAPA சட்டத்தில் கைது செய்யக்கோரி தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமுமுக மாவட்ட தலைவர் சேக்தாவுத் தலைமையில் ஆவடியில் நடைப்பெற்றது.

தேனி மாவட்டம் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய சங்கபரிவார்களை UAPA சட்டத்தில் கைது செய்யக்கோரி தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத்தலைவர் மெளலவி அப்துல்லாஹ் பத்ரி தலைமையில் போடிநாயக்கனூரில் நடைப்பெற்றது.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவுபடுத்தி பேசிய பாஜக சங்கிகள் நுபுல் சர்மா,நவீன் ஜிண்டால் ஆகியோரை UAPA பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி ஈரோடு கிழக்கு மாவட்டம் தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி மாவட்டம்நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய சங்கபரிவார்களை UAPA சட்டத்தில் கைது செய்யக்கோரி தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமுமுக மாவட்ட தலைவர் NMS.சகாபுதீன் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய சங்கபரிவார்களை UAPA சட்டத்தில் கைது செய்யக்கோரி தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத்தலைவர் சேக்பரீத் தலைமையில் திண்டுக்கல்லில் நடைப்பெற்றது.

நாகை மாவட்டம் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய சங்கபரிவார்களை UAPA சட்டத்தில் கைது செய்யக்கோரி தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்மாவட்டத்தலைவர் A.M ஜபருல்லாஹ்தலைமையில் நாகை அவுரி திடலில்நடைப்பெற்றது.

சென்னை மாவட்டம் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய சங்கபரிவார்களை UAPA சட்டத்தில் கைது செய்யக்கோரி தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்மத்திய சென்னை மாவட்ட தலைவர். அப்துல் சலாம் தலைமையில் நடைப்பெற்றது.

விழுப்புரம் தெற்கு மாவட்டம் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய சங்கபரிவார்களை UAPA சட்டத்தில் கைது செய்யக்கோரி தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் மு.யா.முஸ்தாக்தீன் தலைமையில் விழுப்புரத்தில் நடைப்பெற்றது.

கடலூர் வடக்கு மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி சங்பரிவார்களை UAPA சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் V.M.ஷேக்தாவூத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம்நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய சங்கபரிவார்களை UAPA சட்டத்தில் கைது செய்யக்கோரி தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கூத்தாநல்லூர் நகரத்தில் நடைப்பெற்றது.

சேலம் கிழக்கு மாவட்டம் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய சங்கபரிவார்களை UAPA சட்டத்தில் கைது செய்யக்கோரி தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் A.முஹமத் ரஃபீ தலைமையில் நடைப்பெற்றது.

நெல்லை மாவட்டம் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய சங்கபரிவார்களை UAPA சட்டத்தில் கைது செய்யக்கோரி தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத்தலைவர் கே.எஸ். ரசூல்மைதீன் MC தலைமையில் மேலப்பாளையத்தில் நடைப்பெற்றது

சிவகங்கை மாவட்டம் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய சங்கபரிவார்களை UAPA சட்டத்தில் கைது செய்யக்கோரி தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்மாவட்டத்தலைவர் Er.துல்கருணை சேட்தலைமையில் சிவகங்கையில் நடைப்பெற்றது

கோவை வடக்கு மாவட்டம்நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய சங்கபரிவார்களை UAPA சட்டத்தில் கைது செய்யக்கோரி தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம் தலைமையில் நடைப்பெற்றது.

திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய சங்கபரிவார்களை UAPA சட்டத்தில் கைது செய்யக்கோரி தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா தலைமையில் நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம்நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய சங்கபரிவார்களை UAPA சட்டத்தில் கைது செய்யக்கோரி தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமுமுக மாவட்ட தலைவர் அ.ராஜா தலைமையில் நடைப்பெற்றது.

கர்நாடகா:-

கார்நாடக மாநிலம் பெலாகவி பகுதியில் சிறப்புத் தொழுகைக்குப் பிறகு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உருவ பொம்மை ஒன்றுக்கு சேலை கட்டி நுபுர் ஷர்மா புகைப்படம் ஒட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டது. மேலும் கர்நாடகா மாநிலம் கலபுர்கியில் ராசா அகாடமியினர் போராட்டம் நடத்தினர்.


உத்தரகண்ட்:-

உத்தரகண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த போராட்டத்தின் போது வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. கல் வீச்சு தாக்குதலும் நடத்தப்பட்டதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று ஊரடங்கு உத்தரவை காவல்துறை விதித்துள்ளது.


இதேபோல ஆந்திரா, பஞ்சாப், குஜராத், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் திரளாக வந்து போரட்டம் நடத்தினர். இந்நிலையில் போராட்டம் பெரிய அளவில் பரவாமல் இருக்கவும் சட்டம் ஒழுங்கை காக்கவும் மாநில அரசுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback